வடகொரியாமீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா அழைப்பு

வடகொரியாமீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா அழைப்பு

1 mins read
0a7cbd4c-a341-4189-8daf-69dae8e218c7
-

வா‌ஷிங்­டன்: வட­கொ­ரி­யா­வின் ஏவு­கணை சோத­னை­க­ளைத் தொடர்ந்து அந்­நாட்­டின்­மீது கடு­மை­யான பொரு­ளா­தாரத் தடை­க­ளைக் கொண்டு வர வேண்­டும் என்று ஐக்­கிய நாடு நிறு­வ­னத்­துக்கு அமெ­ரிக்கா அழைப்பு விடுத்­துள்­ளது.

வட­கொ­ரியா சென்ற வியா­ழக்­கிழமை அதிக சக்தி வாய்ந்த கண்­டம் விட்டு கண்­டம் பாயும் ஏவு­கணை­ ஒன்றைச் சோதித்­தது.

இது அமெ­ரிக்­கா­ வரை சென்று தாக்க வல்­லது என்­று கூறப்­ப­டு­கிறது.

வட­கொ­ரி­யா­வின் இச்­செ­யல்­கள் ஆபத்­தா­னது, சின­மூட்­டு­வது என்று கூறும் அமெ­ரிக்கா, ஐநா உறுப்பு நாடு­கள் பொரு­ளா­தாரத் தடை விதிக்க அழைப்பு விடுத்­துள்­ளது.

இதற்­கி­டையே, வட­கொ­ரி­யா­வின் ஏவு­கணை சோத­னையை சிங்­கப்­பூர் கண்­டித்­துள்­ளது.

வட­கொ­ரியா நடத்­திய பரி­சோ தனை, ஐநா பாது­காப்பு மன்­றத்­தின் தீர்­மா­னங்­களை மீறிய செயல் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு, தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.