இந்தோனீசியா பனிமலை 2025ல் இல்லாமல் போய்விடும்

இந்தோனீசியா பனிமலை 2025ல் இல்லாமல் போய்விடும்

1 mins read
52f96fd1-439c-4bf4-9af4-04e0784daa13
-

காலநிலை மாற்றத்தால் இந்தோனீசியாவில் இருக்கும் ஒரே பனிமலை வரும் 2025ஆம் ஆண்டில் இல்லாமல் போய்விடும் என்று அந்நாட்டின் வானிலை, காலநிலை, புவி இயற்பியல் முகமை கூறியுள்ளது. இந்தோனீசியாவின் ஆக உயரமான மலையாக அறியப்படும் 'புன்காக் ஜெயவிஜயா' எனும் இந்த பனிமலை பாப்புவாவிலுள்ள ஜெயவிஜய மலை களில் அமைந்துள்ளது. வெப்பமயமாதல், வெப்பநிலை அதிகரிப்பு தொடர்ந்து நீடித்தாலும் காலநிலை மாற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டாலும் இந்தப் பனிமலை இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளதாக முகமையின் தலைவர் ட்விகோரிடா கர்னாவேஷன் சொன்னார். படம்: ஏஎஃப்பி