காபூல்: ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளியை மீண்டும் திறக்கக் கோரி 30க்கும் மேற் பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானின் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் இம்மாதம் 23ஆம் தேதி பள்ளிக்குத் திரும்பினர். ஆனால், பள்ளி திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மறு தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், காபூல் வீதியில் ஒன்றுகூடிய பெண்கள், பள்ளிக்கூடங்களைத் திறக்கவும்! என்று முழக்கமிட்டனர். கல்வி எங்கள் அடிப்படை உரிமை, அது ஒன்றும் அரசியல் திட்டம் கிடையாது என்ற வாசகங்கள் பொருந்திய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

