தற்காலிக விமான நிறுத்த கொள்கை: மாற்றம் இல்லை

தற்காலிக விமான நிறுத்த கொள்கை: மாற்றம் இல்லை

1 mins read
07542416-e8ec-4d82-9261-a13e5f2a95e8
-

ஹாங்காங்: விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஹாங்காங்கின் கொள்கைகளில் பெரிதாக மாற்றம் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் எதுவும் பரிசீலிக்கவில்லை என்று அதன் தலைமை நிர்வாகி கேரி லாம் நேற்று சொன்னார்.

ஹாங்காங் செல்லும் விமானப் பயணிகளில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு மேல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், இரண்டு வாரங்களுக்கு அந்த விமான நிறுவனம் ஹாங்காங்கிற்கு தனது சேவைகளைத் தொடரமுடியாது என்ற கொள்கையை ஹாங்காங் பின்பற்றி வருகிறது.

முன்னதாக, சிங் தாவ் டெய்லி, தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகள் எண்ணிக்கையில் தளர்வு கொண்டு வருவது குறித்து ஹாங்காங் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியிட்டிருந்ததையடுத்து, கேரி லாம் இவ்வாறு கூறியுள்ளார்.