சீன விமான விபத்து: இரண்டாவது கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது

சீன விமான விபத்து: இரண்டாவது கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது

1 mins read
8886a305-7d3f-4af5-ba53-3c39db3b657c
படம்: ராய்ட்டர்ஸ் -

விபத்துக்குள்ளான சீன ஈஸ்டர்ன் விமானத்திலிருந்து தகவல் பதிவுப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாதாக அதன் குரல் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பெட்டிகளையும் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

எம்யு5735 விமானம் வுசாவ் மாநிலத்தில் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. சுமார் 29,000 அடியிலிருந்து விமானம் தலைகீழாக பூமியை நோக்கி மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்தது. விமானத்தில் இருந்த 132 பேரும் மாண்டதாக சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விமானம் நொறுங்கிய இடத்திலிருந்து சுமார் 40 மீட்டர் தள்ளி இரண்டாவது பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பெட்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதால், அவற்றிலிருந்து தகவல்களை மீட்டெடுப்பது சுலபமாக இருக்காது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

விமானத்தின் மற்ற பாகங்களைத் தேடும் முயற்சி தொடர்கிறது. அண்மைய நாள்களில் சில முக்கிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் விபத்தில் மாண்டோருக்காக சம்பவ இடத்தில் நினைவஞ்சலி நடைபெற்றது. அந்த வட்டாரத்தில் இருந்தவர்கள் மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.