'ர‌ஷ்யா உக்ரேனை பிளவுபடுத்த முயல்கிறது'

'ர‌ஷ்யா உக்ரேனை பிளவுபடுத்த முயல்கிறது'

2 mins read
38bd7c89-95fe-4c2a-9e23-79de0bd2664d
ர‌ஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து, உக்ரேனின் டெமிடிவ் கிராமத்தில் இருந்து வெளியேறி உஸ்கோரோட் எனும் இன்னோர் உக்ரேனியப் பகுதியில் உள்ள பள்ளிக்கூட உடற்பயிற்சிக் கூடத்தில் தம் பேத்தியுடன் தஞ்சமடைந்துள்ள தாத்தா, பாட்டி. படம்: ராய்ட்டர்ஸ் -

கியவ்: ஒரு மாத போருக்­குப் பிற­கும், ரஷ்­யா­வால் உக்­ரேனை முழு­மை­யா­கக் கைப்­பற்ற முடி­ய­வில்லை. எனவே, உக்­ரே­னின் குறிப்­பிட்ட ஒரு பகு­தியை தம் கட்­டுப்­பாட்­டிற்­குள் இருக்­கும்­ப­டி­யாக செய்­ய­வும் அதற்­காக உக்­ரேனை இரண்­டாக பிள­வு­ப­டுத்­த­வும் ர‌ஷ்யா முயற்­சிக்­கிறது என்று உக்­ரே­னிய ராணு­வப் பிரிவு கூறி உள்­ளது.

சொல்­லப்­போ­னால், "ர‌ஷ்யா, உக்­ரே­னுக்­குள் தென்­கொ­ரியா, வட­கொ­ரி­யாவை உரு­வாக்­கப் பார்க்­கிறது," என்­றார் உக்­ரே­னின் ராணு­வத் தலை­வர் கைரிலோ புடா­னோவ்.

அத்­து­டன் ர‌ஷ்ய ஆக்­கி­ர­மிப்பு பகு­தி­யில், உக்­ரேன் விரை­வில் கொரில்லா தாக்­கு­த­லைத் தொடங்­க­உள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

'ஒரு விழுக்­காடு ஆயு­தம் போதும்'

இதற்­கி­டையே, உக்­ரே­னுக்கு ஆயு­தங்­கள் தந்து உத­வு­வ­தற்கு மேற்­கத்­திய நாடு­க­ளுக்குப் போதிய தைரி­யம் இல்லை என்று சாடி­யுள்­ளார் உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி.

மேற்­கத்­திய நாடு­கள் தங்­கள் கையி­ருப்­பில் வைத்­துள்ள ஆயு­தக் குவி­யல்­களில், ஒரு­ப­கு­தியை தங்­க­ளுக்கு கொடுக்­கு­மாறு அவர் கேட்­டுக்கொண்­டார். அத்­து­டன் மேற்­கத்­திய நாடு­கள், ர‌ஷ்­யா­வைக் கண்டு பயப்­படு­கின்­ற­னவா என்­றும் அவர் கேட்­டார்.

"பல நாடு­கள், கவச எதிர்ப்பு, விமான எதிர்ப்பு ஏவு­க­ணை­கள், சிறிய ஆயு­தங்­களை அனுப்­பு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளன. ஆனால் எங்­க­ளுக்கு பீரங்­கி­கள், விமா­னங்­கள், கப்­பல் எதிர்ப்பு அமைப்­பு­கள் ஆகி­யவை வேண்­டும்.

"இவை அனைத்­தை­யும் நாங்­கள் கேட்­பது உக்­ரே­னின் சுதந்­தி­ரத்­திற்­காக மட்­டு­மல்ல, ஐரோப்­பா­வின் சுதந்­தி­ரத்­திற்­கா­க­வும்­தான்," என்று ஸெலன்ஸ்கி கூறி­னார்.

நேட்­டோ­வி­டம் இருக்­கும் விமா­னங்­களில் 1 விழுக்­காடு, பீரங்­கி­களில் 1 விழுக்­காடு மட்­டுமே உக்­ரே­னுக்­குத் தேவை என்­றும் அதற்கு மேல் நாங்­கள் கேட்­கப் போவ­தில்லை என்­றும் அவர் கூறி­னார்.

உக்­ரே­னுக்கு ஆயுத உதவி செய்து மேற்­கத்­திய நாடு­கள், ஜெட் விமா­னங்­களை அனுப்­பு­வது குறித்து இன்­ன­மும் எந்த முடி­வும் எடுக்­க­வில்லை.

சுவிஸ் கைக்­க­டி­கா­ரங்­கள் பறி­மு­தல்

இந்­நி­லை­யில், சுவிட்­சர்­லாந்­தின் மிக­வும் விலை­யு­யர்ந்த கைக்­க­டி­கா­ரங்­களை ர‌ஷ்­யப் உள­வுப் படை­யி­னர் பறி­மு­தல் செய்­துள்­ள­தாக சுவிஸ் நாளி­தழ் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பல மில்­லி­யன் டாலர் மதிப்­பு உடைய அடே­மர்ஸ் பிகெட் கைக்­கடி­கா­ரங்­கள் மாஸ்­கோ­வில் உள்ள அதன் நிறு­வ­னத்­தில் இருந்து கைப்­பற்­றப்­பட்­ட­தாக செய்தி கூறு­கிறது.

உக்­ரேன் மீதான ர‌ஷ்­யா­வின் படை­யெ­டுப்­பைத் தொடர்ந்து, ர‌ஷ்­யா­விற்கு ஆடம்­ப­ரப் பொருள்­களை ஏற்­று­மதி செய்ய சுவிஸ் விதித்த பொரு­ளா­தா­ரத் தடைக்­குப் பதி­லடி கொடுக்­கும் வித­மாக ர‌ஷ்யா இத­னைச் செய்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

சுவிட்­சர்­லாந்து கைக்­க­டி­கார ஏற்­று­ம­திச் சந்­தைப் பட்­டி­ய­லில் 17வது இடத்­தில் உள்­ளது ர‌ஷ்யா. சென்ற ஆண்டு மட்­டும், 380 மில்­லி­யன் வெள்ளி மதிப்­பு­டைய கைக்­கடி­கா­ரங்­கள் ஏற்­று­ம­தி­யா­யின.