காபூல்: ஆண் துணை இல்லாமல் வரும் பெண்களை உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் ஏற அனுமதிக்கக்கூடாது என்று தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானில் உள்ள விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்சுக்குக் கிடைத்த தகவல்கள் கூறின.
ஆப்கானிஸ்தானின் பாலியல் குற்றத் தடுப்பு அமைச்சு, இது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியதாக அத்தகவல்கள் கூறின.
இந்நிலையில், ஆண் துணையில்லாமல் சென்ற பெண்கள் சிலர் சனிக்கிழமை அன்று விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே, உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல பெண்கள் அனுமதிக்கப்பட வில்லை என்றால், நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

