பெய்ஜிங்: சீனாவிலேயே ஆக அதிக கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உள்ள மாநிலமாக உருவெடுத்துள்ளது ஷாங்காய்.
இதுவரை அந்நாட்டின் ஜிலின் மாநிலமே ஆக அதிக தொற்றுச் சம்பவங்கள் உள்ள மாநிலமாக இருந்தது.
ஆனால், நேற்று ஜிலினில் 2,078 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த வேளையில், ஷாங்காயில் 2,676 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காயில் முந்திய நாளைவிட தொற்றுச் சம்பவங்கள் 18 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அந்நகர சுகாதார ஆணையம் தெரிவித்தது.
ஷாங்காயில் பதிவாகும் சம்பவங்களில் பெரும்பாலானவை அறிகுறியற்ற தொற்றுச் சம்பவங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல குடியிருப்புக் கட்டடங்கள் முடக்கநிலைக்கு ஆளாகியுள்ளன. தொற்று அதிகரித்தாலும் நகரம் முழுவதையும் முடக்கும் திட்டமில்லை என்று அதிகாரிகள் தொடர்ந்து கூறுகின்றனர்.

