பெய்ஜிங்: சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் கூறியுள்ளது.
முன்னதாக, விமான சிப்பந்திகள் உட்பட விமானத்தில் பயணம் செய்த 132 பேரும் மாண்டுவிட்டதாக விமானப் போக்குவரத்தின் இணை இயக்குநர் நேற்று உறுதி செய்தார்.
மரபணு பரிசோதனை மூலம் அவர்களின் அடையாளம் உறுதிபடுத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
சைனா ஈஸ்டர்ன் நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானம் கடந்த திங்கட்கிழமையன்று, குவான்சி பகுதியில் பறந்துகொண்டிருந்த போது மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கறுப்புப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விபத்துக்கான காரணத்தை விரைவில் அறிய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

