'சிங்கப்பூர் வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள்'

'சிங்கப்பூர் வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள்'

1 mins read
984336ee-dc2a-4a57-a818-e0f1ba376725
மலேசியாவிற்கு எதிராக கோல் போட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடும் சிங்கப்பூரின் இக்‌ஷான் ஃபாண்டி. படம்: தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்: காற்­பந்து விளை­யாட்­டில் தமது பரம எதி­ரி­யான மலே­சி­யாவை சிங்­கப்­பூர் 2-1 என்ற கோல்­க­ணக்­கில் வீழ்த்­தி­யது.

சிங்­கப்­பூர் காற்­பந்துச் சங்­கத்­தின் மூன்று நாடு­க­ளுக்கு இடை­யி­லான நட்­பு­முறை தொட­ரில் இக்­கு­ழுக்­கள் மோதின.

கிட்­டத்­தட்ட 14,890 பார்­வை­யாளர்­கள் முன்­னி­லை­யில், தேசிய விளையாட்டரங்­கில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்த ஆட்­டம், ஃபாண்டி குடும்­பத்­திற்கு முக்­கி­ய­மான நாளாக அமைந்­தது.

ஆம், ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த இக்­‌ஷான், இர்­ஃபான், இல்­ஹான் ஆகிய மூவ­ரும் முதல்­முறை­யாக ஒரே நாளில் காற்­பந்து களத்­தில் இருந்­த­னர்.

அது மட்­டு­மல்­லா­மல், இரு அணி­களும் கோல் எண்­ணிக்­கை­யில் 1-1 என சம­மாக இருந்­த­போது, 76வது நிமி­டத்­தில் விழுந்த இக்­‌ஷா­னின் கோல்­தான் சிங்­கப்­பூ­ரின் வெற்றி கோலாக அமைந்­தது.

தமது சகோ­த­ரர் இல்­ஹான் கள­மி­றக்­கப்­பட்ட ஐந்­தா­வது நிமி­டத்­தில் அந்­தக் கோல் விழுந்­தது.

"கோல் போடு­வது என் கடமை. ஆனால், இன்­றைய நாள் கூடு­தல் சிறப்­பா­னது. சகோ­த­ரர்­க­ளாக இது எங்­க­ளுக்­குச் சிறப்­பா­ன­தொரு தரு­ணம்," என்­றார் இக்­‌ஷான்.

சாங் உய்-யங் அனுப்­பிய பந்தை 30வது நிமி­டத்­தில் கோலாக்கி சிங்­கப்­பூரை முன்­னி­லைப் பெறச் செய்­த­வ­ரும் இக்­‌ஷான்­தான்.

இக்­கோ­லைச் சமன் செய்­யும் மலே­சி­யா­வின் முயற்­சிக்கு பிற்­பாதி ஆட்­டத்­தில் பலன் கிடைத்­தது.

சிங்­கப்­பூ­ரின் தற்­கா­லிக பயிற்­று­விப்­பா­ளர் நஸ்ரி நசிர், "வீரர்கள் அனை­வ­ரும் தங்­க­ளது முழு ஆட்டத் திற­னை­யும் வெளிப்­ப­டுத்­தி­னர். கொஞ்­ச­மும் விட்­டுக்­கொடுக்­க­வில்லை," என்­றார்.

சிங்­கப்­பூர் அணி நாளை பிலிப்­பீன்சை எதிர்­கொள்கிறது.