பயண விதிமுறைகளை ஒருமுகப்படுத்த முயற்சி

பயண விதிமுறைகளை ஒருமுகப்படுத்த முயற்சி

2 mins read
1741b6a4-ff23-4f09-950a-4d57cda81630
-

யோக்­ய­கார்த்தா: கொவிட்-19 சூழ­லில் பய­ணி­க­ளுக்­கான விதி­மு­றை­களை ஒரு­மு­கப்­ப­டுத்தி குழப்­பத்­தைத் தவிர்க்­கும் வழி­மு­றை­க­ள் பற்றி ஜி-20 நாடு­க­ளைச் சேர்ந்த சுகா­தார அதி­கா­ரி­கள் ஆராய்ந்து வரு­கின்­ற­னர்.

"கொவிட்-19 சூழ­லில் பய­ணம் செய்­வோ­ருக்­கான விதி­மு­றை­களை ஒரு­மு­கப்­ப­டுத்­து­கி­றோம். குழப்­பங்­கள் ஏற்­ப­டா­மல் இருக்க இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. இருப்­பி­னும், இது­தொ­டர்­பான விவ­ரங்­களை அந்­தந்த நாடு­கள் முடி­வெ­டுக்க வேண்­டும்.

"நாட்­டின் தேவை, நிலை ஆகி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு விதி­மு­றை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும். சில நாடு­களில் பிசி­ஆர் பரி­சோ­தனை முறை தேவைப்­படும். மற்ற சில நாடு­களில் ஏண்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை முறை (ஏஆர்டி) பயன்­ப­டுத்­து­வது உகந்­த­தாக இருக்­கும்," என்று

இந்­தோ­னீ­சி­ய சுகா­தார அமைச்­சர் புடி சடிக்­கின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று தெரி­வித்­தார்.

மின்­னி­லக்­கத் தட­ம­றி­தல் செயலிக­ளைப் பயன்­ப­டுத்த புதிய மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பம் கைகொ­டுக்­கும் என்­றார் திரு புடி. சிங்­கப்­பூ­ரின் டிரேஸ்­டு­கெ­தர் செயலி­யைப் போல இந்­தோ­னீ­சியா 'பெடுலி லின்­டுன்கி' செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­கிறது.

இந்­தச் செய­லியை 82 நாடு­கள் அங்­கீ­க­ரித்­தி­ருப்­ப­தாக இந்­தோ­னீ­சிய சுகா­தார அமைச்சு கூறி­யது.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டு­விட்­டதை குடி­நு­ழைவு அதி­கா­ரி­க­ளி­டம் நிரூ­பிக்க பய­ணி­கள் தடுப்­பூசி சான்­றிதழ்­களை நம்ப வேண்­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ள­தாக உலக சுகா­தார அமைச்­சின் மூத்த விஞ்­ஞா­னி­யான டாக்­டர் கெரட் மெல் குறிப்­பிட்­டார்.

ஆனால் இந்­தச் சான்­றி­தழ்­

க­ளைச் சில நாடு­கள் ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்­றார் அவர். பய­ணி­கள் எதிர்­கொள்­ளும் இப்­

பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண வேண்­டும் என்றார் அவர். ஜி-20யின் தலை­மையை இந்­தோ­னீ­சியா கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் ஏற்­றது.

இவ்­வா­ரம் யோக்­ய­கார்த்தா நக­ரில் முதல் சுகா­தா­ரப் பணிக் குழுக்­க­ளின் கலந்­து­ரை­யா­டல்­களை இந்­தோ­னீ­சியா ஏற்று நடத்­து­கிறது. இவ்­வாறு மூன்று கலந்­து­ரை­யா­டல்­கள் நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­றும் இடத்­துக்­குச் சில அதி­கா­ரி­கள் நேர­டி­யா­கச் சென்­றுள்­ள­னர். சிலர் இணை­யம் வழி கலந்­து­கொள்­

கின்­ற­னர்.

இரண்­டா­வது கலந்­து­ரை­யாடல் இவ்­வாண்­டின் நடுப்­ப­கு­தி­யில் பாலி­யில் நடை­பெ­றும். மூன்­றா­வது கலந்­து­ரை­யா­டல் இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் லொம்­போக் தீவில் நடை­பெ­றும்.