மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இனி பதவியில் இருக்கக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிபர் பைடனின் பேச்சு பதற்றநிலையை ஏற்படுத்தக்கூடியது என்று ரஷ்யா அதிருப்திக் குரல் எழுப்பியது.
திரு புட்டினின் 22 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கடந்த சனிக்கிழமையன்று போலந்து தலை
நகர் வார்சாவில் உணர்ச்சி பொங்க தெரிவித்தார் அதிபர் பைடன். இந்நிலையில், அதிபர் புட்டினின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் பைடன் கூறவில்லை என்று வெள்ளை மாளிகை தெளிவுப்படுத்த முயன்றது. ஆனால் ரஷ்ய அரசாங்கம் விடுவதாக இல்லை.
"அமெரிக்க அதிபரின் உரைகளை நாங்கள் தொடர்ந்து மிக உன்னிப்பாகக் கவனிப்போம்," என்று ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எச்சரித்தார்.
திரு பைடன் கூறியதற்கு அதிபர் புட்டின் கருத்து தெரிவிக்கவில்லை. ரஷ்யா உலகின் ஆகப் பெரிய நாடாகும். அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளைவிட ஆக அதிகமான அணுவாயுத ஏவு
கணைகளை அது வைத்துள்ளது. அதிபர் பைடன் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் தெரிவித்தார்.
போர் வெடித்திருக்கும் சமயத்தில் இத்தகைய பேச்சு நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என்று அரசியல்
தலைவர்கள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

