வீரமரணம் அடைந்தோரை அடக்கம் செய்த உறவுகள்

வீரமரணம் அடைந்தோரை அடக்கம் செய்த உறவுகள்

1 mins read
f1bf7bb3-4d17-410f-9854-a7f0cd34597b
மாண்ட உக்ரேனிய வீரரின் கல்லறைக்கு அருகில் சோகம் தாங்காமல் அழுத உறவினர்.படம்: இபிஏ -

லியேவ்: ரஷ்­யா­வுக்கு எதி­ரான போரில் மாண்ட தங்­கள் ராணுவ வீரர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்தி அவர்­களை அடக்­கம் செய்ய உக்­ரே­னி­யர்­கள் பலர் லியேவ் நக­ரில் நேற்று முன்­தி­னம் ஒன்­று­கூ­டி­னர்.

போர் நடந்­து­கொண்­டி­ருக்­கும் சம­யத்­தில் தாக்­கு­தல்­க­ளால்

உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் சாத்­தி­யம் அதி­க­மாக இருந்­த­போ­தி­லும் மாண்ட ராணுவ வீரர்­க­ளின் இறு­திச் சடங்­கில் உக்­ரே­னி­யர்­கள் கலந்து­கொண்­ட­னர். உயி­ரி­ழந்த வீரர்­க­ளின் உற்­றார் உற­வி­னர் கண்­ணீர் மல்க வீர­வ­ணக்­கம் செலுத்­தி­னர். அதேபோல போரில் வீர மரணம் அடைந்த தனது வீரர் களையும் ரஷ்யா அடக்கம் செய்தது.