மனைவியைக் கேலி செய்தவரை மேடையிலேயே அறைந்த வில் ஸ்மித்

மனைவியைக் கேலி செய்தவரை மேடையிலேயே அறைந்த வில் ஸ்மித்

1 mins read
6bba27ca-c21b-4014-854c-37f43161a836
கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்த வில் ஸ்மித் (வலம்).படம்: ஏஎஃப்பி -

லாஸ் ஏஞ்சலிஸ்: ஆஸ்­கார் விருது நிகழ்ச்­சி­யில் நினைத்­துப் பார்க்­காத ஒன்று நிகழ்ந்­தது. தமது

மனை­வி­யைக் கேலி செய்­த­வரை பிர­பல ஹாலி­வுட் நடி­கர் வில் ஸ்மித் அறைந்­தார். வில் ஸ்மித்­தின் மனை­வி­யான ஜடா பிங்­கெட் ஸ்மித்­துக்கு தலை­முடி கொட்­டும் பிரச்­சினை உள்­ளது. அத­னால் அவர் மொட்டை அடித்­துள்­ளார். இந்­நி­லை­யில், ஜடா பிங்­கெட்­டின் மொட்­டைத் தலையை மேடை­யில் இருந்த நகைச்­சுவை நடி­கர் கிறிஸ் ராக் கேலி செய்­தார்.

அதைக் கேட்டு வில் ஸ்மித் அவரை நோக்­கிச் சென்­றார். யாரும் எதிர்­பார்க்­காத வகை­யில் ராக்­கின் முகத்­தில் அறை விழுந்­தது. ராக் உட்­பட அரங்­கத்தில் இருந்தோர் அனைவரும் அதிர்ச்­சி­யில் சிறிது நேரம் உறைந்­தனர். ராக்கை அறைந்­த­தும் உட­ன­டி­யாக தமது இருக்­கைக்­குத் திரும்­பி­னார் வில் ஸ்மித். வெறும் நகைச்­சு­வைக்­காக அவ்­வாறு பேசி­ய­தாக ராக் தெரி­வித்­த­போது, தமது மனை­வி­யைப் பற்றி எது­வும் பேச வேண்­டாம் என வில் ஸ்மித் சினங்­கொண்டு

கத்­தி­னார். வில் ஸ்மித்­துக்கு எதி­ராகப் புகார் செய்­யப்­போ­வ­தில்லை என்று ராக் தெரி­வித்­தி­ருப்­ப­தாக லாஸ் ஏஞ்­ச­லிஸ் காவல்­துறை

கூறி­யது.