விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

1 mins read
c963e844-b167-429d-8507-0c9cd4a5bc9d
-

1986க்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிக்கு கனடா தகுதி

டொரோன்டோ: கத்தாரில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு கனடா தகுதி பெற்றுள்ளது. ஆகக் கடைசியாக 1986ஆம் ஆண்டில் அது அப்போட்டியில் பங்கேற்றது. தற்போது 36 ஆண்டுகள் கழித்து உலகக் கிண்ணப் போட்டியில் அது களமிறங்குகிறது. தகுதிச் சுற்றில் ஜமைக்காவை 4-0 எனும் கோல் கணக்கில் பந்தாடிய கனடா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு போட்டியில் இடம்பிடித்துள்ளது.

சவூதி எஃப்1: வெர்ஸ்டப்பன் வெற்றி, ஹேமில்டன் ஏமாற்றம்

ஜெத்தா: சவூதி அரேபியாவில் நடைபெற்ற எஃப்1 பந்தயத்தில் உலக வெற்றியாளரும் ரெட் புல் அணியைச் சேர்ந்தவருமான மேக்ஸ் வெர்ஸ்டப்பன் நூலிழையில் முதலிடம் பிடித்தார். ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லீகிளாக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஃபெராரியின் மற்றொரு வீரரான கார்லோஸ் சேண்ட்ஸ் மூன்றாவதாக வந்தார்.

ஏழு முறை எஃப்1 வெற்றியாளரான லுயிஸ் ஹேமில்டன் பத்தாவது இடத்தில் பந்தயத்தை முடித்தார்.

சவூதி எஃப்1 பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இதுவரை 21 எஃப்1 பந்தயங்களில் வெர்ஸ்டப்பன் வாகை சூடியுள்ளார்.