இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் லாவ்ரோவ்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் லாவ்ரோவ்

1 mins read
f49fcd1a-1e9a-4921-b3fb-6fe819f37880
-

மாஸ்கோ: ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் செர்கே லாவ்­ரோவ் இவ்­வா­ரம் இந்­தி­யா­வுக்கு அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொள்ள இருப்­ப­தாக இந்­தி­யா­வின் தி இந்து நாளி­தழ் தெரி­வித்­துள்­ளது.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­ததை அடுத்து, ரஷ்ய அமைச்­சர் இந்­தி­யா­வுக்­குச் செல்­வது இதுவே முதல்­மு­றை­யாக இருக்­கும்.

ரஷ்ய கச்சா எண்­ணெய்யை இந்­தி­யா­வி­டம் விற்­பது குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இரு­நா­டு­

க­ளி­டை­யி­லான பணப் பரி­வர்த்­தனை முறை பற்­றி­யும் ஆரா­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

உக்­ரேன் மீது தாக்­கு­தல்­

நடத்­தி­வ­ரும் ரஷ்யாவுக்கு எதிராக மேற்­கத்­திய நாடு­கள் பல்­வேறு தடை­களை விதித்­துள்­ளன. ரஷ்­யா­வுக்கு எதி­ராக இந்­தி­யா­வும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அவை வலி­

யு­றுத்­து­கின்­றன. ஆனால்

இந்­தியா நடு­நி­லை­யு­டன் நடந்­து­கொள்­கிறது.

நீண்­ட­கால நட்பு நாடான ரஷ்­யா­வுக்கு எதி­ராக இந்­தியா எவ்­வித தடை­க­ளை­யும் விதிக்­க­வில்லை.

இதற்­கி­டையே, ரஷ்யா மீது மேற்­கத்­திய நாடு­களும் மற்ற சில நாடு­களும் விதித்­துள்ள தடை­

க­ளால் ரஷ்ய வர்த்­த­கத்­துக்கு தேவை­யற்ற தீங்குகள் இழைக்­கப்­ப­டு­வ­தாக சீனா குறை­கூ­றி­உள்­ளது.

சீனா தனது உரி­மையை

விட்­டுக்­கொ­டுக்­காது என்­றும் தனக்­குப் பலன் தரும் நட­வ­டிக்­கை­கள் தொட­ரும் என்­றும்

உறு­தி­யா­கத் தெரி­வித்­துள்­ளது.

ரஷ்யா தனது முக்­கிய அர­ச­தந்­தி­ரப் பங்­காளி என்­றும் அதன் மீது விதிக்­கப்­பட்ட தடை­க­ளால் வழக்­க­மான வர்த்­தக உற­வு­கள் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் சீனா அதி­ருப்தி தெரிவித்தது.