ஜெருசலம்: இஸ்ரேலியப் பிரதமர் நஃப்டாலி பென்னட்டுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்டனை திரு பென்னட் சந்தித்துப் பேசிய பிறகு அவருக்கு நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-அரபு அரசதந்திரிகளின் உச்சநிலை மாநாட்டில் திரு பிளிங்டனை திரு பென்னட் சந்தித்துப் பேசினார். கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளபோதிலும் திரு பென்னட் நலமாக இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, வீட்டிலிருந்தவாறு அவர் தமது பணிகளைத் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.
திரு பிளிங்டனுக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித்
தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதி
முறைகளுக்கு திரு பிளிங்டன் உட்பட்டு நடந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

