தம் மகனுக்காக பழைய வாகனம் ஒன்றை
மர கவச வாகனமாக மாற்றியுள்ளார்
31 வயது வியட்னாமிய தந்தை.
16 பேர் அமர்ந்து செல்லக் கூடிய பழைய மினி வேனின் மேல் பகுதியை தம் கைவண்ணத்தால் கவச வாகனமாக மாற்றி உள்ளார் 31 வயது டுருங் வான் டாவ். பிரான்சின் EBR105 ரகத்தை அடிப்படையாக கொண்டு, அவர் இதனை உருவாக்கியுள்ளார். இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இதனைச் செய்வதற்கு தமக்கு மூன்று மாதங்கள் ஆனதாக அவர் சொன்னார். இதற்காக அவர் கிட்டத்தட்ட 11,100 அமெரிக்க டாலர் (15,000 வெள்ளி) செலவிட்டுள்ளார். ஒவ்வொரு வாரயிறுதி நாள்களிலும் அதில் தம் மகனுடன் மகிழ்ச்சியாக சாலையில் வலம் வருகிறார் டாவ். படம்: ஏஎஃப்பி

