சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூவருக்கு வி‌ஷம்

சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூவருக்கு வி‌ஷம்

2 mins read
bda76d0d-fc97-4fca-98e3-6abfa6768e1c
-

கியவ்: ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னுக்கு மிக­வும் நெருக்­க­மா­ன­வ­ராக கரு­தப்­படும் பெரும் பணக்­கா­ர­ரும் இபி­எல் குழு­வான செல்­சி­யின் முன்­னாள் உரி­மை­யா­ள­ரு­மான ரோமன் அப்­ர­மோ­விச், உக்­ரே­னைச் சேர்ந்த மேலும் இரு­வ­ருக்கு விஷம்

கொடுக்­கப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படு­கிறது. அமெ­ரிக்­கா­வின் வால் ஸ்தி­ரீட் ஜர்­னல் நாளி­தழ் இத­னைத் தெரி­வித்­துள்­ளது.

ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடையே பேச்­சு­வார்த்தை மூலம் சம­ர­சத்தை ஏற்­ப­டுத்த இந்த 3 பேரும் முயற்சி செய்து வரு­கின்­ற­னர். ஆனால் இவர்­க­ளின் முயற்­சியை விரும்­பாத சிலர் இவர்­களை விஷம் வைத்­துக் கொல்ல முயற்சி செய்­தி­ருக்­க­லாம் என்ற யூகங்­கள் வலம் வரு­கின்­றன.

இம்­மாத தொடக்­கத்­தில் கியவ்­வில் நடந்த பேச்­சு­வார்த்­தைக்­குப் பிறகு, அவர்­க­ளி­டம் இதற்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­ட­தாக நாளி­தழ் தெரி­வித்­தது.

அவர்­க­ளது கண்­கள் சிவந்து, முகத்­தி­லும் கைக­க­ளி­லும் பயங்­கர அரிப்பு ஏற்­பட்டு தோல் உரிய ஆரம்­பித்­த­தா­க­வும் கண்­க­ளி­லும் கடு­மை­யான வலி ஏற்­பட்டு நீர் கொட்ட ஆரம்­பித்­த­தா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது.

ஆனால் மூவ­ருக்­கும் உரிய நேரத்­தில் மருத்­துவ சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தால் அவர்­க­ளின் உயி­ருக்கு ஆபத்து எது­வும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், ர‌ஷ்­யாவோ இத்­த­க­வ­லில் நிச்­ச­ய­மாக உண்மை இல்லை என்று கூறி­யுள்­ளது. இதனை, தக­வல் சதி, தக­வல் போர் என்­கி­றார் ர‌ஷ்­யா­வின் செய்­தித் தொடர்­பா­ளர் டிமெட்ரி பெஸ்­கோவ்.

அத்­து­டன், இஸ்­தான்­பு­லில் நடந்த உக்­ரேன்-ர‌ஷ்யா அமை­திப் பேச்­சு­வார்த்­தை­யி­லும் அப்­ர­மோ­விச் கலந்­து­கொண்­டார்.

இருப்­பி­னும், ரஷ்­யா­வு­டன் பேச்­சு­வார்த்­தை­யில் கலந்து கொள்­ப­வர்­கள் எதை­யும் சாப்­பி­டவோ குடிக்­கவோ வேண்­டாம் என்று உக்­ரே­னிய வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரோ குலேபா அறி­வு­றுத்­தி­உள்ளார்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னின் தெற்கு நக­ர­மான மிக்­கோ­லவ்­வில், ர‌ஷ்­யப் படை­கள் அர­சாங்­கக் கட்­ட­டத்தை தாக்கி அழித்துவிட்­ட­தாக அதன் ஆளு­நர் விட்­டலி கிம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்டுள்­ளார்.

இதில் இரண்டு பேர் கொல்­லப்­பட்­ட­னர். எட்டு பேர் இடி­பா­டு­களுக்கு இடை­யில் சிக்­கி­யுள்­ள­னர். மூன்று வீரர்களைக் காணவில்லை.