ஷாங்காயில் நித்தம் உச்சம் காணும் தொற்று; கடும் கட்டுப்பாடுகளால் தவிக்கும் ‌மக்கள்

‌ஷாங்­காய்: சீனா­வின் வா்த்தக மைய­மான ஷாங்­கா­யில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் நித்­த­மும் உச்­சம் தொடுகின்றன. எனவே, ஒட்­டு­மொத்த தொற்றுப் பரி­சோ­த­னை­மேற்­கொள்­ளும் வகை­யில், ஷாங்­கா­யின் புடோங் வட்­டா­ரம், கிழக்­குப் பகு­தி­களில் நேற்று முன்­தி­னம் முதல் முடக்­க­நிலை நடை­மு­றைக்கு வந்­தது. இது வரும் வெள்­ளிக்­கி­ழமை வரை நடப்­பில் இருக்­கும். இந்­நி­லை­யில், நேற்று அங்கு கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டன.

மக்­கள் தங்­கள் குடி­யி­ருப்பு, அலு­வ­ல­கக் கட்­ட­டங்­களில் உள்ள பொது இடங்­க­ளுக்கு செல்­ல­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. முன்பு, இவ்­வி­டங்­க­ளுக்­குச் செல்ல தடை கிடை­யாது. தொற்று பரி­சோ­த­னை­யைத் தவிர, வேறு எந்த கார­ணத்­திற்­கா­க­வும் மக்­கள் வீட்­டை­விட்டு வெளியே செல்­லக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இரண்டாம் கட்­ட­மாக, நக­ரின் மேற்­குப் பகு­தி­யில் 5 நாள் பொது­மு­டக்­கம் வெள்­ளிக்­கி­ழமை முதல் நடை­மு­றைக்கு வரும். இதன்­படி, பொது­மக்­கள் வீடு­க­ளி­லேயே இருக்க வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­தி­யா­வ­சிய பணிப் பட்­டி­ய­லில் சோ்க்கப்­ப­டாத அலு­வ­ல­கங்­கள், அனைத்து தொழிற்­சா­லை­கள், பொதுப் போக்­கு­வ­ரத்து செயல்­ப­டாது.

இதற்­கி­டையே, அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்­கு­வ­தற்­காக மக்­கள் பேரங்­கா­டி­களில் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்­த­னர். ஒரு சில கடை­களில் பொருள்­கள் விற்­றுத் தீர்ந்­து­விட்­ட­தாக சமூக ஊட­கத்­தில் சிலர் பதி­விட்­டி­ருந்­த­னர்.

‌ஷாங்­கா­யில் நேற்று ஆக அதி­க­மாக 4,381 அறி­கு­றி­க­ளற்ற தொற்­றுச் சம்­ப­வங்­களும் அறி­கு­றி­யுள்ள 96 தொற்­றுச் சம்­ப­வங்­களும் பதி­வா­னதாக அந்நகர அரசாங்கம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!