இத்தாலி அணியில் நீடிப்பேன்: மன்சினி

இத்தாலி அணியில் நீடிப்பேன்: மன்சினி

1 mins read
4ff0d3bb-3773-4633-be52-cdb131dce926
-

ஃபுளோரன்ஸ்: இத்தாலி காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் தாம் தொடர்ந்து நீடிப்பேன் என்று ரொபர்ட்டோ மன்சினி சூசகமாக கூறியுள்ளார். நார்த் மேசடோனியாவிடம் 1-0 எனத் தோற்று உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறாமல் போனது இத்தாலி. இதையடுத்து, மன்சினி அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று பேசப்பட்டது.

இந்நிலையில், தாம் அணியின் தலைவரிடம் பேசியதாகவும் எல்லாம் எப்போதும்போல் உள்ளதாகவும் அணியை மேம்படுத்துவது குறித்து அவர்கள் விரைவில் பேசவுள்ளதாகவும் மன்சினி தெரிவித்துள்ளார்.