காற்பந்து: பிலிப்பீன்சை வீழ்த்தி சிங்கப்பூர் தொடர் வெற்றி

காற்பந்து: பிலிப்பீன்சை வீழ்த்தி சிங்கப்பூர் தொடர் வெற்றி

1 mins read
c2aa50d0-8d9d-412b-b302-c64ba99bc4b7
-

சிங்கப்பூர்: மூன்று நாடு­கள் பங்­கேற்­கும் அனைத்­து­லக நட்­பு­முறை காற்­பந்­துப் போட்­டி­கள் தொட­ரில் நேற்­றி­ரவு சிங்­கப்­பூர் குழு, பிலிப்­பீன்ஸ் குழு­வைச் சந்­தித்­தது. அந்த ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர் 2-0 என்ற கோல்கணக்­கில் வெற்றி பெற்­

றது.

ஏற்­கெ­னவே மலே­சி­யா­வி­டம் தோல்வி கண்ட பிலிப்­பீன்ஸ் குழு எப்­ப­டி­யா­வது இந்த ஆட்­டத்­தில் வெற்றி பெற வேண்­டும் என்ற முனைப்­பு­டன் விளை­யா­டி­யது.

சிங்­கப்­பூ­ரும் அதன் இரண் டாவது வெற்­றி­யைப் பதிவு செய்ய கடு­மை­யாக போரா­டி­யது. ஆட்­டத்­தின் 10வது நிமி­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் ‌சஃபுவான் பஹா­ருடின் முதல் கோலைப் போட்­டார்.

முற்­பாதி ஆட்­டம் முடி­வு­றும் தறு­வா­யில் பிலிப்­பீன்­சின் ஆட்­டக்­கா­ரர் ஒரு­வர் முரட்­டுத்­த­ன­மாக விளை­யா­டி­ய­தால், சிவப்பு அட்டை காண்­பிக்­கப்­பட்டு, திட­லை­விட்டு வெளி­யேற்­றப்­பட்­டார்.

பிற்­பாதி ஆட்­டத்­தில் பத்து ஆட்­டக்­கா­ரர்­க­ளு­டன் விளை­யா­டி­னா­லும் சம­நிலை கோல் போடும் விறு­வி­றுப்­பு­டன் விளை­யா­டி­யது பிலிப்­பீன்ஸ். சிங்­கப்­பூ­ரும் பிலிப்­பீன்­சின் கோல் முனையை தொடர்ந்து முற்­று­கை­யிட்டு, கோல் போட முயன்­றது.

இறு­தி­யில், ஆட்­டத்­தின் 90வது­ நி­மி­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் ‌ஷவால் அன்­வார் இரண்­டா­வது கோலைப் போட்டு, சிங்­கப்­பூ­ரின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தி­னார்.

கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூர் 2-1 என்ற கோல்கணக்கில் மலேசியாவை வெற்றி கண்டது.