ர‌ஷ்யா ஏமாற்றுவதாக சாடல்

ர‌ஷ்யா ஏமாற்றுவதாக சாடல்

2 mins read
58f3821c-710e-425d-a577-107448c70006
ர‌ஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் மிகலோவ் நகரத்தில் சேதமடைந்த அரசாங்கக் கட்டடம். படம்: ராய்ட்டர்ஸ் -

கியவ்: உக்­ரே­னு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யின்­போது உறுதி அளித்­த­து­போல், ரஷ்யா படை­களைக் குறைக்­க­வில்லை என்று உக்­ரேன் குற்­றம்­சாட்­டி­யுள்­ளது.

ஒரு மாதத்­திற்­கும் மேலாக நீடித்து வரும் சண்­டைக்கு இடை­யில், பல கட்ட அமைதிப் பேச்­சு­வார்த்­தை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

நேற்­று­முன்­தி­னம், துருக்­கி­யில் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­யின்­போது, உக்­ரேன் தலை­ந­கர் கீவ், செர்­னி­ஹிவ் நக­ரில் படை­களை குறைக்க ரஷ்யா ஒப்­புக்­கொண்­டது.

ஆனால், ர‌ஷ்யா படை குறைப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடுப­ட­வில்லை என்று செர்­னி­ஹிவ் நகர மேயர் வியா­செஸ்­லாவ் சாஸ் தெரி­வித்­துள்­ளார்.

"நாங்­கள் அவர்­க­ளது வாக்­கு­று­தியை நம்­பு­வோம் என்று நினைக்­கி­றீர்­களா. நிச்­ச­ய­மாக இல்லை. நேற்­று­முன்­தி­னம் இர­வு­கூட ரஷ்யா இங்கு வான்­வ­ழித் தாக்­கு­தல்­களை நடத்­தி­யது," என்­றார் அவர்.

மரி­ய­போல் நக­ரத்­தி­லும் ர‌ஷ்­யப் படை­கள் தீவி­ரத் தாக்­கு­தல் நடத்தி வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

படைக் குறைப்பு என்ற பெய­ரில், வடக்கு உக்­ரே­னில் இருந்து கிழக்கு பகு­தி­க­ளுக்கு ர‌ஷ்யா படை­களை மாற்­று­வ­தற்­கான ர‌ஷ்­யா­வின் ஏமாற்­றுச் செயல் என்று உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்­கி­யின் ஆலோ­ச­கர் ஒலெக்ஸி அரெஸ்­டோ­விச் கூறி­னார்.

இருப்­பி­னும், கியவ்­வில் நிச்­ச­ய­மாக ர‌ஷ்­யப் படை­கள் கொஞ்­ச­மாவது இருக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

உக்­ரே­னில் இருந்து அக­தி­க­ளாக வெளி­யே­றி­யோ­ரின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 40 லட்­சத்தை எட்­டி­யி­ருக்­கும் என்று ஐநா அகதி­கள் அமைப்­பின் தலை­வர் பிலிப்போ கிராண்டி சொன்­னார்.

இதற்­கி­டையே, படை­க­ளைக் குறைப்­ப­தாக ரஷ்யா அறி­வித்­திருப்­பது ஏமாற்­றும் செயல் என்று பென்­ட­கன் செய்தி தொடர்­பா­ளர் ஜான் கிர்பி தெரி­வித்­துள்­ளார்.

அத்­து­டன் ர‌ஷ்­யா­வில் இருக்­கும் அமெ­ரிக்­கர்­கள் உடனே அந்­நாட்­டில் இருந்து வெளி­யேற வேண்­டும் என்று அமெ­ரிக்கா அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

தற்­போ­தைய ‌சூழ­லில் ர‌ஷ்­யா­வில் இருக்­கும் அமெ­ரிக்கக் குடி­மக்­களை, ர‌ஷ்ய அதி­கா­ரி­கள் துண்­பு­றுத்­து­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ள­தாக அமெ­ரிக்கா கூறு­கிறது.