விண்ணையும் மண்ணையும் ஒரே நேரத்தில் ரசித்தபடி, உணவருந்தும் அனுபவத்தைத் தருகிறது இந்தோனீசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள உணவகம் ஒன்று. பூமியில் இருந்து கிட்டத்தட்ட 45 முதல் 50 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கும் இந்த உணவகத்தில் நான்கு பேர் அமரக்கூடிய எட்டு மேசைகள் போடப்பட்டு உணவுப் பரிமாறப்படுகிறது. இங்கு உணவருந்த வாடிக்கையாளர்களுக்கு மூன்று விதமான திட்டங்களை வழங்குகிறது 'டின்னர் இன் த ஸ்கை' நிறுவனம். அவற்றின் விலை 1.6 மில்லியன் ரூப்பியா முதல் 3.7 மில்லியன் ருப்பியா ($153 முதல் $353 வெள்ளி வரை) வரை இருக்கும்.
படம்: லிட்ஸ் இந்தோனீசியா/ஃபேஸ்புக்

