இலங்கையில் பத்து மணி நேர மின்வெட்டு

இலங்கையில் பத்து மணி நேர மின்வெட்டு

1 mins read
558736e6-e083-4837-8b6e-96c639de0fe5
-

கொழும்பு: பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக, இலங்­கை­யில் 10 மணி நேரம் மின்­வெட்டை நடை­மு­றைப்­படுத்த சிலோன் மின் வாரி­யம் வைத்த கோரிக்­கைக்கு இலங்கை பொது பயன்­பாட்டு ஆணை­யம் ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது.

அனல்­மின் நிலை­யங்­க­ளுக்­குத் தேவை­யான டீசல் பற்­றாக்­குறை ஏற்­பட்­டி­ருப்­ப­தால், இலங்­கை­யில், கடந்த பிப்­ர­வரி மாதம் முதலே கடு­மை­யான மின்­வெட்டு நிலவி வரு­கிறது. மழை இல்­லா­த­­தால், நீர்த் தேக்­கங்­கள் மூல­மான மின்­சார உற்­பத்­தி­யும் கடு­மை­யா­கப் பாதிக்கப்­பட்­டுள்­ளது.

பொரு­ளா­தார நெருக்­க­டியை சமா­ளிக்க அரசு நாளுக்கு நாள் சிக்­கன நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறது. இந்த நிலை­யில் எரி­பொ­ருள் பற்­றாக்­குறை­யைச் சமா­ளிக்க மின்­வெட்டு நேரத்தை அதி­க­ரிக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே, இலங்­கை­யில் ஏற்­பட்­டி­ருக்­கும் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக தொழில்­களும் வர்த்­த­கங்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், இந்த மின்­வெட்டு பெரிய அள­வுக்கு பாதிப்பை ஏற்­படுத்­தும் என்று வணி­கர்­கள் அச்­சம் அடைந்­துள்­ள­னர்.

இந்த நெருக்­கடி நிலை­யில் மின்­சா­ரத்­தைச் சேமிக்க அர­சாங்க ஊழி­யர்­கள் வீட்­டி­லி­ருந்து பணி­யாற்­றும் முறையை நடை­மு­றைப்­படுத்­து­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, இலங்­கை­யில் அதி­க­மாக பயன்­ப­டுத்­தப்­படும் டீசல் அடுத்த இரண்டு நாள்­க­ளுக்கு கையி­ருப்பு இல்லை என்று கூறப்­பட்­டுள்­ளது.

வீட்டு உப­யோ­கத்­திற்­காக,

மண்­ணெண்­ணெய் வாங்க

வரி­சை­யில் காத்­தி­ருக்­கும் பெண். படம்: ஏஎ­ஃப்பி