நான் உயிர்பிழைத்திருப்பது ஓர் அதிசயம்: மகாதீர்

நான் உயிர்பிழைத்திருப்பது ஓர் அதிசயம்: மகாதீர்

1 mins read
d1e12b2e-ac13-408e-bd40-7f44dcf7187c
-

பெட்­டா­லிங் ஜெயா: சென்ற ஜன­வரி மாதம் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட பிறகு, தாம் மீண்­டும் உயிர்­பி­ழைத்து வரு­வேன் என நினைக்­க­வில்லை என்று மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­மது கூறி­யுள்­ளார்.

"என்­னைப் பொறுத்­த­வரை, இது­வொரு அதி­ச­யம். நான் உயிர்­வாழ்­வேன் என்று எண்­ண­வில்லை. என் வயது, மார­டைப்பு போன்­ற­வற்­றின் கார­ண­மாக நான் இறந்து­வி­டு­வேன் என்று நினைத்­தேன்.

ஆனால், மருத்­து­வர்­கள் என்னை மீண்­டும் குண­ம­டை­யச் செய்­துள்­ள­னர். நான் நல­மாக இருக்­கி­றேன். முன்­பைப்போல் இல்­லா­விட்­டா­லும், சிறு வேலை­களை என்­னால் செய்­ய­மு­டி­யும்," மருத்­து­வர்­க­ளைப் பாராட்­டு­வ­தற்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்ச்­சி­யில் பேசிய அவர் இவ்­வாறு சொன்­னார்.

மருத்­து­வத் துறை­யில் மலே­சியா அப­ரி­மி­த­மான முன்­னேற்­றத்தை அடைந்­துள்­ளது என்­றும், மருத்­துவ நிபு­ணர்­கள் மலே­சி­யா­வில் இருப்­ப­தால் நாம் வேறு எங்கும் செல்­ல­வேண்­டி­ய­தில்லை என்­ப­தும் பெரு­மைப்­பட வேண்­டிய ஒன்று என்றும் அவர் சொன்­னார்.