போனவர்கள் திரும்பி வருவார்கள்: கேரி லாம் நம்பிக்கை

போனவர்கள் திரும்பி வருவார்கள்: கேரி லாம் நம்பிக்கை

1 mins read
e6bdae76-9d4a-482c-89f3-696f217315f5
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் கடு­மை­யான கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­களால், வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­கள் வெளி­யேறி வரு­கின்­ற­னர்.

இத­னால், அங்கு திற­னா­ளர்­களுக்­குப் பற்­றாக்­குறை ஏற்­ப­டக்­கூ­டும் என்­பதை முதல்­மு­றை­யாக ஹாங்­காங்­கின் தலைமை நிர்­வாகி கேரி லாம் வெளிப்­ப­டை­யாக ஒப்புக்­கொண்­டுள்­ளார்.

ஆனா­லும் ஹாங்­காங்­கின் எதிர்­கால வளர்ச்சி குறித்து தாம் மிக­வும் நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தாக அவர் சொன்­னார்.

ஹாங்­காங்­கின் கட்­டுப்­பா­டு­கள் தனி­ந­பர்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் பாதித்­துள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

"ஆனால் கொள்­ளை­நோய் முடி­வுக்கு வந்த பிறகு, ஹாங்­காங்­கிற்கு நல்ல வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என நம்­பு­கி­றேன்.

"திற­னா­ளர்­க­ளுக்­கும் குறிப்பிட்ட பிரிவு மாண­வர்­களுக்கும் ஹாங்­காங் இன்­ன­மும் பிடித்­த­மா­ன­தா­கவே உள்­ளது," என்­றார்.

இவர்­கள் இங்­கும் அங்­கும் போய் கொண்­டி­ருப்­ப­வர்­கள், எனவே, போன­வர்­கள் மீண்டும் ஹாங்காங்கிற்குத் திரும்பி வரு­வார்­கள் என்­றும் அவர் சொன்

னார்.