அமெரிக்காவில் 80 வாகனங்கள் விபத்து

அமெரிக்காவில் 80 வாகனங்கள் விபத்து

1 mins read
f1bcdd9b-3461-456b-bc12-3d71a9f7202b
படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

அமெரிக்காவில் ஒரு நெடுஞ்சாலையில் 80 வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஆறு பேர் மாண்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

படுமோசமான மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பென்சில்வேனியா மாநிலத்தில் அந்த அசம்பாவிதம் நடந்தது.

வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டதால், பல நொறுங்கிய நிலையில் இருந்தன. சில வாகனங்களிலிருந்து புகை வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.

விபத்தைத் தொடர்ந்து அந்தச் சாலையில் பல கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் முதலுதவி, மீட்புப் பணியாளர்கள் ஆகியோர் சம்பவயிடத்தைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது.

மூடுபனி காரணத்தினால், சாலையையும் போக்குவரத்தையும் பார்க்க சிரமப்பட்டதாக ஓட்டுநர்கள் சிலர் கூறினர்.

இந்த வாரம் பென்சில்வேனியாவில் கடும் பனிப்பொழிவு தாக்கியுள்ளது. வழக்கமாக கடுமையான வானிலை நிலவினால், அவ்வாட்டார வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் அன்று பனிப்பொழிவு திடீரென்று ஏற்பட்டதால், எச்சரிக்கை விடுக்க போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.