400,000 பேர் சிங்கப்பூருக்குச் செல்வர்: மலேசியா

400,000 பேர் சிங்கப்பூருக்குச் செல்வர்: மலேசியா

1 mins read
fb5671f4-a383-4bac-ba7d-a216b169646b
-

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தாராள தரைவழி பயணம் நாளை மீண்டும் முழுமையாகத் தொடங்வுள்ள நிலையில் மலேசியாவிலிருந்து கிட்டத்தட்ட 400,000 பேர் ஒரே வாரத்தில் சிங்கப்பூருக்குள் கடப்பர் என்று ஜோகூர் முதல்வர் ஓன் ஹாஃபிஸ் கூறியுள்ளார்.

ஜோகூரில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் அனைத்து பாதைகளும் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கு முன் தினசரி சுமார் 400,000 பேர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார். நாளை எல்லைகள் முழுமையாகத் திறக்கும்போது, அடுத்த ஒரு வாரத்துக்குள் இதே எண்ணிக்கையை எட்டக்கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சொன்னார்.

புதிய விதிமுறைகள் பற்றி பயணிகளுக்கு விளக்கமளிக்க இன்போ கிராபிக்ஸ் எனும் விளக்கப்படங்களை ஜோகூர் அரசாங்கம் தயாரித்துவருவதாக அவர் கூறினார்.

மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்வோர் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளவோ தனிமைப்படுத்திக்கொள்ளவோ தேவையில்லை. ஆனால் பயணிகள் ''மைசெஜஹாத்ரா' எனும் செயலியைப் பதவிறக்கும் செய்து வைத்திருக்கவேண்டும்.

இந்தச் செய்தி குறித்த விரிவான தகவல்கள் நாளைய தமிழ் முரசில் வாசிக்கலாம்