மருத்துவமனையின் கவனக்குறைவால் 200க்கும் அதிகமான குழந்தைகள் மாண்டன: பிரிட்டன் அரசாங்கம் மன்னிப்பு

மருத்துவமனையின் கவனக்குறைவால் 200க்கும் அதிகமான குழந்தைகள் மாண்டன: பிரிட்டன் அரசாங்கம் மன்னிப்பு

2 mins read
70d27a50-6a57-44d1-8769-57e8037c1317
படம்: மருத்துவமனையின் பேஸ்புக் -

பிரிட்டனில் ஓர் அரசாங்க மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் மாண்டதற்கு அந்நாட்டு அரசாங்கம் மன்னிப்பு கேட்டுகொண்டுள்ளது.

குழந்தைகளுக்குப் போதிய பராமரிப்பு அளிக்கப்பட்டிருந்தால் அவை உயிர் பிழைத்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

பிரிட்டனில் நடந்துள்ள ஆக மோசமான மகப்பேறு சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை பிரிட்டன் வெளியிட்டுள்ளது

2000ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தச் சம்பவங்கள் அந்த மருத்துவமனையில் நடந்தன. வழக்கத்துக்கு மாறாக பல குழந்தைகள் பிறந்த உடனே மாண்டன அல்லது மூளையில் மோசமான குறைபாடுகளுடன் பிறந்தன.

அதே காலக்கட்டத்தில் குழந்தையைப் பெற்றேடுக்கும்போது உயிரிழந்த 12 தாயார்களில் ஒன்பது பேருக்குப் போதிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என அறிக்கையில் கூறப்பட்டது.

மாண்ட சிலருக்கு இயற்கை பிரசவத்துக்குப் பதிலாக சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர்கள் மாண்டிருக்கமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

அதோடு ஃபோர்செப் எனும் பிரசவத்தின்போது குழந்தையின் தலையை இழுக்கும் செயலில் பல குழந்தைகளின் மண்டை ஓடு, உடல் எலும்புகள் முறிக்கப்பட்டன. சில குழந்தைகளுக்குப் பெருமூளை வாதம் ஏற்பட்டது. ஃபோர்செப் சிகிச்சையை மிகுந்து அழுத்தத்துடன் செய்ததால் குழந்தைகளுக்கு இவ்வாறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவங்களை மருத்துவமனை முழுமையாக விசாரிக்க தவறியதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுகொண்டார் அந்நாட்டு சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்.

காவல் துறை சமபவங்களை விசாரித்தவருவதாகக் கூறிய அவர், இதற்குக் காரணமானவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படும் என்றார்.