இலங்கை பொருளாதார நெருக்கடி: தெரு விளக்குகள் அணைப்பு

இலங்கை பொருளாதார நெருக்கடி: தெரு விளக்குகள் அணைப்பு

1 mins read
91428aec-1223-4167-b5a9-1ac5be09b6b0
படங்கள்: ஏஃபி -
multi-img1 of 3

இலங்கையில் மின்சாரம் சேமிக்க தெரு விளக்குகள் அணைக்கப்படுதம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டை இறுக்கிவரும் பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 13 மணிநேரம் வரை தடை நீடிக்கிறது.

பேருந்துகள், வணிக வாகனங்கள் பயன்படுத்தும் டீசல் முற்றாக விற்பனையில் இல்லை. பெட்ரோல் குறைவான அளவிலே விற்கப்படுவதால், பலரும் தங்கள் வாகனங்களைச் சாலையிலே விட்டுவிட்டனர்.

இந்நிலையில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதற்குக்கூட முடியாமல் இலங்கை மீனவர்கள் தவிக்கின்றனர். கடலில் ஏராளமான மீன்கள் குவிந்திருந்தாலும், அவற்றை கடலுக்குச் சென்றுபிடிக்க வழியில்லை. படகுகைளைச் செலுத்த டீசல், மண்ணெண்ணெய் இரண்டுமே கிடையாது. இதனால் மீனவக் குடும்பங்கள் பசியால் வாடுகின்றனர்.

இலங்­கை­யின் அந்­நி­யச் செலாவணிக் கையி­ருப்பு, வர­லாற்­றில் இல்­லாத அள­வுக்­குக் குறைந்து விட்­ட­தால் இறக்­கு­ம­திக்­குப் பணம் செலுத்த அந்த நாடு திண்­டாடி வரு­கிறது. அதனால், உதவி கேட்டு பல நாடு­க­ளை­யும் இலங்கை அணுகி வரு­கிறது.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபின் இலங்கை சந்திக்கும் ஆக மோசமான பொருளாதார நெருக்கடி இது எனக் கூறப்படுகிறது.