இலங்கையில் நேற்று நடந்த வன்மையான ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கு அகியவற்றை கட்டிக்காக்கவும், அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் இவ்வாறு செய்யப்படுவதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்தார்.
நேற்று அதிபர் வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ, காவல் துறை அதிகாரிகளுடன் மோதினர். பல அரசாங்க வாகனங்களுக்குத் தீ மூட்டப்பட்டது.
கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் ஊரடங்கை விதிக்கப்பட்டது.
விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு அதியவற்றை எதிர்த்து இலங்கை மக்கள் கடந்த சில நாள்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


