இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு எதிரான தடை மீட்பு

இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு எதிரான தடை மீட்பு

1 mins read
aad79801-7311-46ce-af5b-a7c374736961
படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசாங்கம் மீட்டுக்கொண்டுள்ளது. தடையை எதிர்த்து பலத்த குறைகூறல்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக அந்நாட்டு அரசாங்கம் சமுக ஊடகங்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் தடை செய்தது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துவரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யு டியூப் உள்பட பல சமுக ஊடகத்தளங்கள் இன்று காலை முடக்கப்பட்டன. அந்நாட்டு தற்காப்பு அமைச்சு இதற்கு உத்தரவிட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையம் குறிப்பிட்டது.

பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அமைதியான போரட்டங்களில் ஈடுப்பட மக்களுக்குச் சமுகத் தளங்கள் மூலம் அழைப்புகள் விடுக்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து அனைத்து சமுகத் தளங்களும் முடக்கப்பட்டன.

இதை எதிர்த்து, தலைநகர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து சென்ற பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இராணுவத்தால் நிறுத்திப்பட்டனர்.

இலங்கையில் நேற்று நடந்த வன்மையான ஆர்ப்­பாட்­டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சட்டங்களை ரத்து செய்ய, பொதுமக்களை தடுத்துவைக்க, ஒருவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அதிபருக்கு அனைத்து உரிமைகளும் அளிக்கப்படும்.

இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டைவையை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.