மானிய விலை பெட்ரோல்: மலேசியா எச்சரிக்கை

மானிய விலை பெட்ரோல்: மலேசியா எச்சரிக்கை

2 mins read
a78cc866-cff5-4c60-8452-06ecd10f9acc
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றிற்கு மானிய விலை பெட்ரோல் நிரப்பப்படும் படம் சமூக ஊடகத்தில் வலம் வந்தது. படம்: நஜிப் ரசாக்/ஃபேஸ்புக் -

கோலா­லம்­பூர்: மானிய விலை RON95 பெட்­ரோலை வெளி­நாட்­டில் பதிவு செய்­யப்­பட்ட வாக­னங்­க­ளுக்கு விற்­கப்­ப­டு­வது குறித்து மலே­சிய பெட்­ரோல் நிலை­யங்­களுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டு உள்­ளது.

மானிய விலை பெட்­ரோலை வெளி­நாட்டு வாக­னங்­க­ளுக்கு விற்­பது தொடர்­பாக உள்ள தடை குறித்து சிங்­கப்­பூர் எல்­லை­யை­யொட்டி உள்ள எரி­பொ­ருள் நிறு­வ­னங்­கள், பெட்­ரோல் நிலை­யங்­க­ளுக்கு பல­முறை கூறப்­பட்­ட­தாக உள்­நாட்டு வர்த்­தக, நுகர்­வோர் விவ­கார அமைச்­சர் அலெக்­சான்­டர் நந்தா லிங்கி சொன்­னார்.

இந்­தத் தடை சென்ற 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடப்­பில் உள்­ளது.

சிங்­கப்­பூர், தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளின் எல்­லை­களில் கண்­கா­ணிப்­பைத் தீவி­ரப்­ப­டுத்­த­வும் சட்­டத்தை மீறு­வோ­ருக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­க­வும் எல்­லை­யில் உள்ள மாநில அமைச்­சு­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

இச்­சட்­டத்தை மீறும் தனி­ந­ப­ருக்கு 1 மில்­லி­யன் ரிங்­கிட் அப­ரா­தம் அல்­லது மூன்­றாண்டு சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். நிறு­வ­னங்­க­ளுக்கு அதி­க­பட்­ச­மாக 2 மில்­லி­யன் ரிங்­கிட் (640,000 வெள்ளி) அப­ரா­தம் விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு, நில வழிப் போக்­கு­வ­ரத்து இம்­மா­தம் 1ஆம் தேதி முதல் மீண்­டும் தொடங்­கி­யது.

இந்­நி­லை­யில், வெளி­நாட்டு வாக­னம் ஒன்­றிற்கு மானிய விலை (மஞ்­சள் நிற குழாய்) பெட்­ரோல் நிரப்­பப்­படும் படம் ஒன்றை மலே­சிய முன்­னாள் பிர­த­மர் நஜிப் சமூக ஊட­கத்­தில் பகிர்ந்­தி­ருந்­தார்.

சமூக ஊட­கத்­தில் வலம் வந்த படத்­தைத் தொடர்ந்து, இந்த வி‌ஷ­யம் விமர்சனத்துக்குள்ளானதாக பெர்­னாமா செய்தி கூறி­யது.

இது­கு­றித்து விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தா­க­வும் பெட்­ரோல் நிலைய நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து கண்­கா­ணிக்­கு­மா­று கூறப்­பட்­டுள்­ள­தா­க­வும் அலெக்­சான்­டர் கூறி­னார்.