புத்ரஜெயா: சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் மலேசிய நில வழி எல்லையைத் திறந்த ஐந்து நாள்களில், வெளிநாட்டு வாகனங்களுக்கு மானிய விலை பெட்ரோல் நிரப்பப்பட்டதாக மலேசிய அரசாங்கத்தில் ஏழு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகார அமைச்சகத்தின் அமலாக்க இயக்குநர் அஸ்மான் ஆடம், "இந்த அனைத்து வழக்குகளும் ஜோகூரில் பதிவாகியுள்ளன. இது, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுடன் தொடர்புடையவை என்பதைக் காட்டுகிறது," என்றார்.
இதுதொடர்பாக, ஜோகூரில் உள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்களில் விசாரணை நடத்தப்
படுவதாக அவர் சொன்னார் என பெர்னாமா செய்தி குறிப்பிட்டிருந்தது.
மேலும் இதுகுறித்து இறுதி கட்ட விசாரணை நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.
மார்ச் 31 முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், RON97 பெட்ரோல் 3.91 ரிங்கிட் டாகவும் RON95 எனும் மானிய விலை பெட்ரோல் 2.05 ரிங்கிட்டாக (0.66 வெள்ளி) உள்ளது.

