இலங்கையில் நெருக்கடிநிலை அகற்றப்பட்டது: தொடரும் அரசியல் குழப்பம்

இலங்கையில் நெருக்கடிநிலை அகற்றப்பட்டது: தொடரும் அரசியல் குழப்பம்

1 mins read
489aded8-bac8-4998-a17b-762d0c42959b
படங்கள்: எஃபி -
multi-img1 of 2

இலங்கையில் ஆளும் கூட்டணியிலிருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கோத்­த­பாய ராஜபக்சே நெருக்கடி நிலையை அகற்றியுள்ளார். சென்ற வெள்ளிக்கிழமை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி, பதவி ஏற்ற மறுநாளே பதவி விலகினார். அனைத்துலக பண நிதியத்துடன் அவர் பேச்சு நடத்த இருந்தது.

இதற்கிடையே, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு எந்நேரமும் சரியக்கூடும் என மருத்துவர் அமைப்பு எச்சரித்துள்ளது. உயிர்க்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மோசமான நெருக்கடியைச் சந்திக்கும் மக்களுடைய உயிருக்கும் ஆபத்து நேரிடலாம் எனக் கூறப்பட்டது.