ஹாங்காங் தேர்தலில் போட்டியிடும் ஜான் லீ

1 mins read
630849d9-b079-41bc-a7bb-d29d27a2fd8d
-

ஹாங்­காங்: ஹாங்­காங் தலை­வர் தேர்­த­லில் தாம் போட்­டி­யி­டப்­போ­வ­தாக திரு ஜான் லீ அறி­வித்­துள்ளா்.

64 வயது திரு லீ, தேர்­த­லில் போட்­டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்­துள்ள முதல் நபர். தேர்­த­லில் அவரை எதிர்த்து நிற்க யாரும் இருக்­க­மாட்­டார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆக்­க­க­ர­மான முறை­யில் ஆட்சி செய்வது, ஹாங்­காங்­கின் போட்­டித்­தன்மையை வளர்ப்­பது, அந்­ந­க­ரின் வளர்ச்­சிக்­காக வலு­வான அடித்­த­ளத்தை அமைப்­பது ஆகிய மூன்று அம்­சங்­களில் தமது தேர்­தல் பிசா­ரம் கவ­னம் செலுத்­தும் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

ஹாங்­காங்­கில் போது­மான வீடு­கள் இல்லை. இந்­தப் பிரச்­சினை­யைத் தீர்த்­து­வைப்­பது திரு லீயின் திட்­டங்­களில் ஒன்று.

சட்­டத்தை நிலை­நாட்டி ஹாங்­காங்­கின் நீண்­ட­கால நிலைத்­தன்மை­யைப் பாது­காக்­கப்­போ­வ­தா­க­வும் திரு லீ உறு­தி­ய­ளித்­தார்.

"களே­ப­ர­மாக இருந்த ஹாங்­காங் கடந்த ஈராண்­டு­களில் அமை­தி­யாக மாறி­விட்­டது. இனி அடுத்த ஐந்­தாண்­டு­களில் அமை­தி­யாக இருக்­கும் நக­ரம் செழிக்­க­வேண்­டும்," என்று அவர் கூறி­னார். ஹாங்­காங் நக­ரின் அடுத்த தலை­வர் இவ்­வாண்டு ஜூலை மாதம் ஒன்­றாம் தேதி பத­வி­யேற்­பார்.