ஹாங்காங்: ஹாங்காங் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக திரு ஜான் லீ அறிவித்துள்ளா்.
64 வயது திரு லீ, தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள முதல் நபர். தேர்தலில் அவரை எதிர்த்து நிற்க யாரும் இருக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ககரமான முறையில் ஆட்சி செய்வது, ஹாங்காங்கின் போட்டித்தன்மையை வளர்ப்பது, அந்நகரின் வளர்ச்சிக்காக வலுவான அடித்தளத்தை அமைப்பது ஆகிய மூன்று அம்சங்களில் தமது தேர்தல் பிசாரம் கவனம் செலுத்தும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
ஹாங்காங்கில் போதுமான வீடுகள் இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பது திரு லீயின் திட்டங்களில் ஒன்று.
சட்டத்தை நிலைநாட்டி ஹாங்காங்கின் நீண்டகால நிலைத்தன்மையைப் பாதுகாக்கப்போவதாகவும் திரு லீ உறுதியளித்தார்.
"களேபரமாக இருந்த ஹாங்காங் கடந்த ஈராண்டுகளில் அமைதியாக மாறிவிட்டது. இனி அடுத்த ஐந்தாண்டுகளில் அமைதியாக இருக்கும் நகரம் செழிக்கவேண்டும்," என்று அவர் கூறினார். ஹாங்காங் நகரின் அடுத்த தலைவர் இவ்வாண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி பதவியேற்பார்.

