ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் மே 21

1 mins read
b67717c4-396c-4a2d-8db5-7839d63220c8
பிரதமர் ஸ்காட் மோரிசனின் ஆளும் கூட்­டணி, எதிர்க்­கட்­சி­யான தொழி­லா­ளர் கட்­சி­யை­விட பின்­தங்­கி­யுள்­ள­தாக ஒரு கருத்து கணிப்பு காட்கிறது (படம்: ராய்ட்டர்ஸ்) -

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் மே 21ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவினம், பருவநிலை மாற்றம், அரசியல் கட்சிகளின் திறன் ஆகியவற்றை பற்றி தேர்தல் பிரசாரம் நடக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திரு மோரிசனிள் ஆளும் கூட்­டணி, எதிர்க்­கட்­சி­யான தொழி­லா­ளர் கட்­சி­யை­விட பின்­தங்­கி­யுள்­ள­தாக ஒரு கருத்து கணிப்பு காட்கிறது.

நாட்டின் வலுவான பொருளியல் வளர்ச்சி, சிறந்த தேசிய தற்காப்பு ஆகியவற்றின் அடிப்படையில் திரு மோரிசன் பிரசாரம் அமையும் எனக் கூறப்பட்டுள்ளது.

கொவிட்-19 சூழல், நாட்டைப் பெரிதும் பாதித்துள்ள வெள்ளம் ஆகிய சூழ்நிலைகளை பிரதமர் சரி­யா­கக் கையா­ளவில்லை என்று குறைகூறல்கள் எழுந்துள்ளன.