கியவ் வீதியில் துணிச்சலாக உலா வந்த பிரிட்டிஷ் பிரதமர்

கியவ் வீதியில் துணிச்சலாக உலா வந்த பிரிட்டிஷ் பிரதமர்

2 mins read
3e7f6ff9-60fb-431f-b3ca-f81431b8f216
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் (வலம்), கியவ் வீதியில் நடந்து சென்ற பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன். படம்: ஏஎஃப்பி -

கியவ்: உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வின் வீதி­களில் அந்­நாட்டு அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்­கி­யு­டன் பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் நேற்று முன்­தி­னம் தைரி­ய­மாக உலா வந்­தார்.

சில நாட்­க­ளுக்கு முன்பு கியவ் நகரை ரஷ்­யப் படை­கள் தாக்­கின. ஆபத்து இன்­ன­மும் முழு­மை­யாக நீங்­காத நிலை­யில் யாரும் எதிர்­பார்க்­காத ஒன்றை பிர­த­மர் ஜான்­சன் செய்­துள்­ளார்.

கியவ் நக­ருக்கு அவர் மேற்­கொண்ட திடீர் பய­ணம் அனை­

வ­ரை­யும் வியக்க வைத்­துள்­ளது.

ஆள் அரவமற்ற வீதி­களில் பாது­காப்பு அதி­கா­ரி­கள் புடை­சூழ தம்­மு­டன் பிர­த­மர் ஜான்­சன் நடந்­து­சென்­ற­தைக் காட்­டும் காணொ­ளி­ க­ளை­யும் படங்­க­ளை­யும் அதி­பர் ஸெலன்ஸ்கி வெளி­யிட்­டார்.

இரு தலை­வர்­கள் வீதி­யில் நடந்து சென்­ற­போது அங்­கி­ருந்த உக்­ரே­னி­யர்­கள் அவர்­க­ளைப் பார்த்து கை அசைத்து வர­வேற்­ற­னர்.

அவர்­களில் ஒரு­வர் திரு ஜான்­

ச­னைப் பார்த்து உணர்ச்­சி­வ­சப்­பட்டு அழு­தார்.

"எங்­க­ளுக்கு உங்­க­ளது உதவி தேவை," என்­றார் அவர்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு ஜான்­சன், " உங்­க­ளைச் சந்­தித்­த­தில் மகிழ்ச்சி. உக்­ரே­னி­யர்­களுக்கு உதவி செய்ய எங்­க­ளுக்­குக் கிடைத்த வாய்ப்­பைப் பாக்­கி­ய­

மா­கக் கரு­து­கி­றோம். உங்­க­ளுக்கு மிகச் சிறந்த அதி­பர் கிடைத்­

தி­ருக்­கி­றார்," என்று கூறி­னார்.

அத­னைத் தொடர்ந்து, அதி­பர் ஸெலன்ஸ்­கி­யு­டன் பிர­த­மர் ஜான்­சன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்.

உக்­ரே­னி­யர்­க­ளு­டன் பிரிட்­டிஷ் மக்­கள் கொண்­டி­ருக்­கும் ஒற்­று­மையை அந்­தக் கலந்­து­ரை­யா­டல் பிர­தி­ப­லிப்­ப­தாக திரு ஜான்­சன் தெரி­வித்­தார்.

ரஷ்­யா­வுக்கு எதி­ரான போரில் உக்­ரே­னுக்கு பிரிட்­டன் ஆத­ர­வுக்­

க­ரம் நீட்­டும் என்று அவர் உறுதி அளித்­தார்.

உக்­ரே­னுக்­குக் கூடு­தல் ஆயு­தங்­களை அனுப்­பி­வைக்­கப்­போ­வ­தாக திரு ஜான்­சன் தெரி­வித்­தார்.

போர் நடந்­து­கொண்­டி­ருக்­கும்­போது நேரில் வந்து ஆத­ரவு தெரி­வித்த திரு ஜான்­ச­னின் தலை­மைத்­து­வம் பொன் எழுத்­து­களில் பொறிக்­கப்­படும் என்­றும் வர­லாற்­றில் அவர் இடம்­பி­டித்­து­விட்­டார் என்­றும் அதி­பர் ஸெலன்ஸ்கி பாராட்­டி­னார்.

அதி­பர் ஸெலன்ஸ்­கி­யைச் சந்­தித்­துப் பேச திரு ஜான்­ச­ன்

போலந்­தி­லி­ருந்து கியவ் நக­ருக்கு ரயி­லில் சென்­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.