மே 21ல் ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்

மே 21ல் ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்

1 mins read
0d20e5f4-8e64-48a4-b050-a4d87324a1db
-

கேன்­பரா: ஆஸ்­தி­ரே­லி­யப் பொதுத் தேர்­தல் அடுத்த மாதம் 21ஆம் தேதி­யன்று நடை­பெ­றும் என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் நேற்று அறி­வித்­தார்.

தேர்­தல் பிர­சா­ரங்­க­ளின்­போது வாழ்க்­கைச் செல­வி­னம், பரு­வ­நிலை மாற்­றம், பிர­தான கட்­சி­

க­ளின் ஆற்­றல் ஆகி­யவை குறித்து கார­சா­ர­மான விவா­தங்­கள் நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

திரு மோரி­ச­னின் கன்­சர்­வேட்­டிவ் கூட்­டணி கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக ஆட்சி செய்­து­

வ­ரு­கிறது. ஆனால் தற்­போது அக்­கூட்­ட­ணிக்கு இருக்­கும் ஆத­ர­வை­விட தொழி­லா­ளர் கட்­சிக்கு அதிக ஆத­ரவு இருப்­ப­தாக அண்­மை­யில் நடத்­தப்­பட்ட கருத்­துக் கணிப்­பு­கள் தெரி­விக்­கின்­றன.

2019ஆம் ஆண்டு தேர்­த­லுக்கு முன்பு நடத்­தப்­பட்ட கருத்­துக்­

க­ணிப்­பி­லும் திரு மோரி­ச­னுக்­குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்­தத் தேர்­த­லில் திரு மோரி­சன் வெற்றி பெற்று ஆட்­சி­யைப் பிடித்­தார்.

"நிலை­யற்­ற­தன்மை அதி­க­மாக உள்­ளது என்­பது எனக்கு நன்­றா­கத் தெரி­யும். ஆனால் இந்­தத் தேர்­த­லும் தேர்­தல் பிர­சா­ர­மும் மிக­வும் முக்­கி­யம்.

எங்­கள் கூட்­டணி அமைத்­தி­ருக்­கும் அர­சாங்­கத்­தி­டம் சில குறை­பா­டு­கள் உள்­ளன. அதை நாங்­கள் ஒப்­புக்­கொள்­கி­றோம். எங்­கள் நிலைப்­பாடு குறித்து ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளுக்­குத் தெரி­யும். இந்­நாள் நாங்­கள் செய்­துள்ள பணி­கள் எதிர்­கா­லம் குறித்து நாங்­கள் கொண்­டுள்ள திட்­டங்­கள் ஆகி­யவை பற்றி வெளிப்­

ப­டை­யா­கக் கூறி­யுள்­ளோம்," என்று தலை­ந­கர் கேன்­ப­ரா­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு மோரி­சன் தெரி­வித்­தார்.