ஹாங்காங்: ஹாங்காங்கில் முன் இல்லாத அளவில் ஏறத்தாழ 700 கிலோ போதைப்பொருளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்தப் போதைப்பொருள்
மெக்சிகோவிலிருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்துறை தொடர்பான சாதனங்கள் அனுப்பிவைக்கப்படும் கொள்கலன்களில் போதைப்பொருள் ஒளித்துவைக்கப்
பட்டிருந்தது.
கப்பல் மூலம் ஒரு கொள்
கலனும் விமானம் மூலம் இன்னொரு கொள்கலனும் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த இரு கொள்கலன்களில் ஒன்று சீன எல்லைக்கு அருகில் உள்ள சரக்குக் கிடங்குக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் அறிந்து அதிகாரிகள் அங்கு விரைந்து போதைப்பொருளைப் பறிமுதல் செய்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை நடத்தப்படுகிறது.

