நடுவானில் விமானத்துக்கு ஏற்பட்ட இயந்திர கோளாறு

நடுவானில் விமானத்துக்கு ஏற்பட்ட இயந்திர கோளாறு

1 mins read
f3cb91bd-9e09-4a0d-b9f2-70e6b0b47f34
-

பெட்­டா­லிங் ஜெயா: சாபா­வில் உள்ள தாவாவ் நகரை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த மலே­சிய ஏர்­லைன்ஸ் விமா­னம் இயந்­தி­ரக் கோளாறு கார­ண­மாக கோலா­லம்­பூ­ருக்­குத் திரும்­பி­ய­தாக மலே­சிய சிவில் போக்­கு­வ­ரத்து விமான ஆணை­யம் தெரி­வித்­தது.

விமா­னத்­தின் வேகம், உய­ரம் ஆகி­ய­வற்றை தெரி­விக்­கும் கருவி பழு­த­டைந்­தி­ருப்­ப­தாக ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக ஆணை­யத்­தின் தலைமை நிர்­வாகி கெப்­டன் செஸ்­டர் வூ கூறி­னார்.

இத்­த­கைய கோளாறு ஏற்

பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­த­தும் விமானி உட­ன­டி­யா­கச் சரி­யான முடிவை எடுத்­த­தாக அவர் கூறி­னார். அத்­து­டன் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அவர் கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்­குத் திரும்­பி­ய­தாக அவர் கூறி­னார்.