படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது ‌ஷாங்காய்

படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது ‌ஷாங்காய்

1 mins read
7ed399dd-58e7-4045-b2c8-c6dfbd68fd4e
‌ஷாங்காய்யில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான சுய பரிசோதனை கருவியை எடுத்துச் செல்லும் சுகாதார ஊழியர். படம்: இபி‌ஏ -

‌ஷாங்­காய்: ‌‌ஷாங்­கா­யில் கிருமிப் பரவல் கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­படும் என்று அந்நகர அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஒரே நாளில் 25,000த்திற்­கும் அதி­க­மான தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யி­ருந்­தா­லும் இரண்டு வாரங்­க­ளாக நீடிக்­கும் முடக்­க­நிலையைத் தளர்த்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­காக குடி­யி­ருப்­புப் பகு­தி­கள் மூன்று பிரி­வு­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அதன்­படி, இரண்டு வாரங்­க­ளாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­காத குடி­யி­ருப்­பு­களில் உள்­ள­வர்­கள் தங்­க­ளது அக்­கம்­பக்­கத்­தில் குறிப்­பிட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள்.

இந்த அறி­விப்பு, முடக்­க­நி­லை­யால் உணவு, மருந்து கிடைக்­கா­மல் தவிக்­கும் மக்­க­ளுக்கு நிம்­மதி அளித்­துள்­ளது.

‌ஷாங்­காய் நக­ரத்தின் 2,460 பகு­தி­களில் ஒரு வார­மாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­காதவை. இவை 'கட்­டுக்­குள்' உள்ள பகுதி என்று வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இரண்டு வாரங்­களாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­காத 7,565 பகு­திகள் 'தொற்று தடுக்கப்பட்ட பகு­தி­கள்' என அறிவிக்கப்பட்டு உள்ளன. இப்­ப­கு­தி­களில் முடக்­க­நிலை தளர்த்­தப்­ப­டு­கிறது.

முடக்­க­நி­லை­யால் சாதா­ரண மக்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்­பைக் குறைக்க அதிக முயற்­சி­களை மேற்­கொள்­வ­தாக அந்­ந­கர அதி­காரி கு ஹோங்­குய் சொன்­னார்.

ஆனால், தொற்­றுச் சம்­ப­வம் அதி­க­மாக இருக்­கும் சம­யத்­தில், அறி­விக்­கப்­பட்­டுள்ள இந்த தளர்வு ஆபத்­தா­னது என்று சிலர் விமர்­சித்­த­னர்.