பாகிஸ்தானின் பிரதமராக‌‌ ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு

பாகிஸ்தானின் பிரதமராக‌‌ ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு

1 mins read
7630686a-8fb3-463b-9a72-c27433dc13bb
‌ஷெபாஸ் ‌ஷரிஃப் மூன்று முறை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர். படம்: இணையம் -

கராச்சி: பாகிஸ்­தா­னில் இம்­ரான் கான் தலை­மை­யி­லான அரசு கவிழ்ந்­த­தை­ய­டுத்து, புதிய பிர­த­ம­ராக பாகிஸ்­தான் முஸ்­லிம் லீக் (நவாஸ்) கட்­சி­யின் தலைவா் ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு செய்­யப்­பட்­டார்.

இம்­ரான் கானின் பாகிஸ்­தான் தெஹ்­ரீக்-இ-இன்­சாப் கட்­சி­யைச் சேர்ந்த அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பதவி வில­கி­ய­தால், எதிர்க்­கட்­சி­களே இல்­லா­மல் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு பிர­த­ம­ரா­கி­உள்­ளார் ஷெபாஸ் ஷரிஃப்.

70 வய­தா­கும் ‌ஷெபாஸ், பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் நவாஸ் ‌ஷரி­ஃப்­பின் தம்­பி­யா­வார்.

‌‌‌‌‌ஷெபாஸ் மூன்று முறை பாகிஸ்­தா­னின் பஞ்­சாப் மாநில முத­ல­மைச்­ச­ராக இருந்தவர்.

2017ஆம் ஆண்டு தேசிய அர­சி­ய­லில் நுழைந்த ஷெபாஸ், பாகிஸ்­தான் முஸ்­லிம் லீக் கட்­சி­யின் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றார். பண­மோ­சடி குற்­றச்­சாட்­டில் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்ட அவர், கடந்த ஆண்டு சிறை­யில் இருந்து விடு­த­லை­யா­னார்.

பாகிஸ்­தா­னில் சென்ற வாரம் தொடங்­கிய அர­சி­யல் குழப்­பத்­தைத் தொடர்ந்து, அப்­போ­தைய பிர­த­மர் இம்­ரான் கானுக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா தீா்மானத்தை அவை துணைத் தலைவா் காசிம் சுரி நிரா­க­ரித்­தார்.

ஆனால், அது செல்­லாது என்­றும் நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் நடத்த வேண்­டும் என்று உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. அதில், இம்­ரான் கான் தோற்­று­விட்­டார்.