பிரான்ஸ் தேர்தல்; மெக்ரோன், ல பென் இடையே போட்டி

பிரான்ஸ் தேர்தல்; மெக்ரோன், ல பென் இடையே போட்டி

1 mins read
afe34b54-ed8f-45fe-be1e-145630b13fa0
-

பாரிஸ்: பிரான்ஸ் அதி­பர் தேர்­த­லில் நேற்று முன்­தி­னம் நடந்த முதற்­கட்ட தேர்­த­லில் எந்த வேட்­பா­ள­ரும் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற­வில்லை.

எனவே, முதல் இரண்டு இடங்­களைப் பிடித்த இமா­னு­வல் மெக்­ரோன், மரின் ல பென் ஆகி­யோ­ரில் ஒரு­வரை அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான இரண்­டாம் கட்­டத் தேர்­தல் வரும் 24ஆம் தேதி நடை­பெற உள்­ளது.

பிரான்ஸ் அதி­பர் தேர்­த­லில் 12 வேட்­பா­ளர்­கள் போட்­டி­யிட்­ட­னர். நேற்று முன்­தி­னம் பதி­வான வாக்­கு­கள் எண்­ணப்­பட்­ட­தில் எந்த வேட்­பா­ள­ரும் 51 விழுக்­காடு வாக்­கு­க­ளைப் பெற­வில்லை. இப்­போ­தைய அதி­பர் இமா­னு­வல் மெக்­ரோன் 27.6 விழுக்­காடு வாக்­கு­க­ளைப் பெற்று முத­லி­டத்­தில் உள்­ளார்.

வல­து­சா­ரிக் கட்­சி­யைச் சேர்ந்த மரின் ல பென் 23.4 விழுக்­காடு வாக்­கு­க­ளு­டன் இரண்­டா­மி­டத்­தில் உள்­ளார்.

பிரான்ஸ் தேர்­தல் விதி­மு­றைப்­படி எந்த வேட்­பா­ள­ரும் பெரும்­பான்மை வாக்­கு­க­ளைப் பெறா­விட்­டால் முத­லிரு இடங்­க­ளைப் பிடித்­தோர் இடையே இரண்­டாம் கட்­டத் தேர்­தல் நடை­பெ­றும்.