கேரேன்: ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டக்காரர்களைக் குறிவைத்து மியன்மாரின் கேரேன் மாநிலத்தில் ராணுவப் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக ஊடகச் செய்திகள் கூறின.
தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள லே கே காவ் நகரத்தை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கிளர்ச்சிக் குழுவின் படோ சா தவ் நீ சொன்னார். தங்களது படையினர் 45 ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும் தங்கள் தரப்பில் இருவர் மாண்டுவிட்டதாகவும் அவர் சொன்னார்.
மியன்மார் ராணுவப் படைத் தளபதி ஒருவரையும் கிளர்ச்சியாளர்கள் பிடித்துவைத்திருப்பதாக உள்ளூர் தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.

