தூதரக அதிகாரிகளைத் திரும்ப அழைத்தது மலேசியா

தூதரக அதிகாரிகளைத் திரும்ப அழைத்தது மலேசியா

1 mins read
1a293195-2860-4506-b09a-4044078c966f
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், அண்­மை­யில், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­க­ளுக்­குப் பய­ணம் சென்­றி­ருந்­தார்.

அப்­போது, அவரை வர­வேற்­ப­தற்­கான நிர்­வாக நட­வ­டிக்­கை­களை முறை­யாக ஒருங்­கி­ணைக்­கத் தவ­றிய தூத­ரக அதி­கா­ரி­கள் இரு­வர் மலே­சி­யா­விற்­குத் திரும்ப அழைக்­கப்­பட்­டதை மலே­சிய வெளி­யு­றவு அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யது.

துபாய் குடி­நு­ழைவு துறை­யி­னர் கடப்­பி­தழை சரி­பார்க்­கும் வரை, விமான நிலை­யம் வந்­தி­றங்­கும் பகு­தி­யில் பிர­த­மர் அதிக நேரம் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­தது என­வும் மேலும் பிர­த­ம­ரின் பாது­காப்பு தொடர்­பிலும் முறை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வில்லை என­வும் அமைச்­சின் அறிக்­கை­ கூறியது.

"இது­கு­றித்து, சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள், துறை­க­ளு­டன் கலந்து பேசப்­பட்­டது. மேலும் இரு­தரப்பு உற­வைக் கட்­டிக்­காக்­கும் நோக்­கில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது," என அறிக்கை கூறி­யது.

சென்ற மார்ச் 27 முதல் 31ஆம் தேதிவரை துபாய் பயணம் மேற்கொண்டிருந்த இஸ்மாயில், துபாய் 2020 கண்காட்சியில் கலந்துகொண்டார்.