இந்தோனீசிய அதிபர் பதவிக்காலம் நீட்டிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்தோனீசிய அதிபர் பதவிக்காலம் நீட்டிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1 mins read
77fc133a-cf52-48e4-bdd5-ba4fa1fd8623
-

இரண்டு தவணைகளுக்கு மேலும் ஒருவர் அதிபராக நீடிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படக்கூடும் என்ற யூகங்கள் இந்தோனீசிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து, தெற்கு சுலாவேசி, மேற்கு ஜாவா, ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சமையல் எண்ணெய் விலையுயர்வுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். ஆனால், அரசாங்கத்திற்கு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை என்றும் திட்டமிட்டபடி பிப்ரவரி 2024ல் தேர்தல் நடைபெறும் என்றும் வலியுறுத்தி வருகிறார் அதிபர் ஜோக்கோ விடோடோ. ஆர்ப்பாட்டத்தின்போது நீருற்றின் மீது ஏறியவரை போலிசார் கைது செய்தனர். படம்: ஏஎஃப்பி