பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் நிறைவேறியது

பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் நிறைவேறியது

2 mins read
21e7b149-6a33-4696-9284-de9e7dd2cb15
-

ஜகார்த்தா: பாலி­யல் வன்­மு­றைக்கு எதி­ரான சட்­டத்தை இந்­தோ­னீ­சிய நாடா­ளு­மன்­றம் நேற்று நிறை­

வேற்­றி­யது.

நீண்­ட­கா­ல­மாக எதிர்­பார்க்­கப்­பட்ட இந்த வர­லாற்று சிறப்­பு­மிக்க முடிவு நேற்று எடுக்­கப்­பட்­டது.

இந்­தோ­னீ­சி­யா­வில் இவ்­வ­ளவு கால­மா­கப் பாலி­யல் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தனிப்­பட்ட விவ­கா­ரங்­க­ளா­கக் கரு­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த மாற்­றத்­தால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரைப் பாது­காக்க புதிய சட்­டக் கட்­ட­மைப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பாலி­யல் வன்­மு­றைக்கு எதி­ரான மசோ­தாவை சட்­ட­மாக்க இந்­தோ­னீ­சிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் பெரும்­பா­லா­னோர் ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

மசோதா சட்­டா­மாக்­கப்­ப­டு­வ­தைத் தடுத்து நிறுத்த சில பழ­மை­வாத எதிர்க்­கட்­சி­யி­னர் முயன்று தோற்­ற­னர்.

இத்­த­கை­யோ­ரின் எதிர்ப்பு கார­ண­மாக இந்த மசோதா கடந்த ஆறு ஆண்­டு­க­ளா­கக் கிடப்­பில் இருந்­தது.

இந்­நி­லை­யில், புதிய சட்­டத்தை சமூக ஆர்­வ­லர்­கள் பெரி­தும் வர­வேற்­றுள்­ள­னர்.

ஆனால் இந்­தச் சட்­டத்­துக்கு இருக்­கும் வரம்­புக்­குச் சிலர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

பாலி­யல் வன்­பு­ணர்வு குற்­றங்­க­ளுக்கு இந்­தச் சட்­டத்­தைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

அத்­த­கைய குற்­றங்­க­ளுக்­காக வேறொரு சட்­டம் நிறை­வேற்­றப்­படும் என்று இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ள­து.

இந்­தோ­னீ­சி­யா­வில் பாலி­யல் வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ரான புகார்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

பாலி­யல் வன்­மு­றைக்கு எதி­ரான முறை­யான சட்­டக் கட்­ட­மைப்பு இல்­லாத கார­ணத்­தால் குற்­றம் புரி­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தில் குழப்­பங்­கள் நில­வின.

அத்­து­டன், பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளைச் சாட்­சிக் கூண்­டில் நிறுத்தி வழக்­க­றி­ஞர்­கள் கேள்வி கேட்­ப­தா­கக் கூறி அவ­மா­னப்­ப­டுத்­தும் நடை­முறை இருந்­த­தால் பலர் முன்­வ­ரத் தயங்­கி­ய­தாக சமூக ஆர்­வ­லர்­கள் தெரி­வித்­த­னர்.

புதிய சட்­டத்­தின்­கீழ் பாலி­யல் வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­வோ­ருக்கு 12 ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

கரம்­பி­டித்த பெண், வேறு பெண்­கள் ஆகி­யோ­ரைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளைப் பாலி­யல் ரீதி­யா­கக் கொடு­மைப்­ப­டுத்­து­வோ­ருக்கு 15 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

பெண்­ணைக் கட்­டா­யப்­ப­டுத்தி திரு­ம­ணம் செய்­வோ­ருக்கு ஒன்­பது ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

வயது குறைந்த சிறு­மி­க­ளைத் திரு­ம­ணம் செய்­கொள்­வ­தும் இதில் அடங்­கும்.

பெண்­களின் சம்மதம் இல்லாது அவர்களது பாலி­யல் ரீதி­யான

தக­வல்­களை வெளி­யி­டு­வோ­ருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.